12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட திட்டக்குழுவிற்கு 12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். இப்பதவியிடங்களுக்கு 12 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 12 பேர் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆதலால் 12 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் டாக்டர் தண்டபாணி அறிவித்தார். போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் வருமாறு:- மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கணேசன், சிவக்குமார், சுபாஷினி, தமிழ்வாணன், நர்மதா, பாலச்சந்தர், போஸ், வேல் ராணி என்ற உமா லட்சுமி சிவகாசி மாநகராட்சி உறுப்பினர் சுதாகரன், ராஜபாளையம் நகராட்சி உறுப்பினர் சுமதி ஸ்ரீ, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி உறுப்பினர் செல்வமணி, அருப்புக்கோட்டை நகராட்சி உறுப்பினர் தமிழ் காந்தன்.
Related Tags :
Next Story