1200 தன்னார்வலர்கள் பங்கேற்ற மாபெரும் தூய்மை பணி

மயிலாடுதுறையில் 1200 தன்னார்வலர்கள் பங்கேற்ற மாபெரும் தூய்மை பணி நடந்தது
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 1 முதல் 36 வார்டுகளில் 1200 தன்னார்வலர்கள் பங்கேற்ற மாபெரும் தூய்மை பணியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்:- மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மாவட்டம் முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தூய்மை பணிகளை அவ்வப்போது நான் நேரில் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டு வருகிறேன். தூய்மை பணியாளர்கள் மூலம் பொதுமக்களின் வீடுகளில் இருந்தும் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள், மேற்பார்வையாளர்களின் பெயர் அலைபேசி எண்ணுடன் கூடிய விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தங்களுடைய வார்டுகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார். இதில் மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா, நகர சபை தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, நகராட்சி பொறியாளர் சனல்குமார் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.