ரூ.1.22 கோடியில் புதிய பள்ளி கட்டிடங்கள்

நெமிலியில் ரூ.1.22 கோடியில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தேரி, ஓச்சலம், மஞ்சம்பாடி, ஆட்டுப்பாக்கம் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் தொடங்கி வைத்தார். அதன்படி அடுத்தசித்தேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஒச்சலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மஞ்சம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆட்டுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளில் ரூ.1 கோடியே 22 லட்சத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட பூமிபூஜை நிகழ்ச்சி நடந்தது. சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கலைஞ்செழியன், ஓச்சலம் ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன், கீழ் வெங்கடாபுரம் ஒன்றிய கவுன்சிலர் வினாயகம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேதமுத்து, சிவராமன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் புருஷோத்தமன், முகமது அப்துல் ரஹ்மான், அரிகிருஷ்ணன், சின்னப்பா, குப்புசாமி, அப்துல் நசீர், பலராமன், குப்பா நாயுடு, வினோத், சம்பந்தன், வேலு, ஆகியோர் கலந்து கொண்டனர்.