ராணிப்பேட்டை மாவட்டத்தில் அம்ரித் சரோவர் மிஷன் திட்டத்தில் 14 குளங்கள் அமைப்பு


ராணிப்பேட்டை மாவட்டத்தில் அம்ரித் சரோவர் மிஷன் திட்டத்தில் 14 குளங்கள் அமைப்பு
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அம்ரித் சரோவர் மிஷன் திட்டத்தில் 14 குளங்கள் அமைப்பு

ராணிப்பேட்டை

கடந்த 24.4.2022 அன்று தேசிய பஞ்சாயத்து தினத்தை முன்னிட்டு, பிரதமரால் அம்ரித் சரோவர் மிஷன் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 75 குளங்கள் புதிதாக உருவாக்குதல் ஆகும். ஒவ்வொரு குளமும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவிலும், சுமார் 10 ஆயிரம் கன மீட்டர் நீர் தேங்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும்.

இந்த திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 56 அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 25 சதவீத இலக்கை வருகிற 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும். 15-வது நிதி குழு மானியம், கனிம நிதி மற்றும் கிராம பஞ்சாயத்து பொது நிதியின் மூலம் அரக்கோணம் ஒன்றியம் இச்சிபுத்தூர், நெமிலி ஒன்றியம் உளியநல்லூர், பின்னாவரம், பள்ளூர், அரிகிலப்பாடி, சோளிங்கர் ஒன்றியம் புலிவலம், பாண்டியநல்லூர், ஆற்காடு ஒன்றியம் ஆயிலம், மேச்சேரி, திமிரி ஒன்றியம் ஆணைமல்லூர், வளையாத்தூர், வாலாஜா ஒன்றியம் முகுந்தராயபுரம், தென்கடப்பந்தாங்கல், அனந்தலை ஆகிய 14 ஊராட்சிகள் முதல் கட்டமாக குளங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story