144 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்


144 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
x

144 குழந்தைகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு தங்க மோதிரம் அணிவித்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி வாணியம்பாடி நியூ டவுனில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. வாணியம்பாடி நகர செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, நகரமன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சூரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிறந்த 144 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து சிறப்புரையாற்றினார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, வில்வநாதன், ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா பாரி, பேரூராட்சி செயலாளர்கள் ஆ.செல்வராஜ், ஸ்ரீதர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் முனிவேல் மற்றும் வாணியம்பாடி நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story