சென்னை ஐ.ஐ.டி.யில் 15 சிறப்பு மையங்கள் தொடக்கம்


சென்னை ஐ.ஐ.டி.யில் 15 சிறப்பு மையங்கள் தொடக்கம்
x

புகழ்பெற்ற கல்வி நிறுவனத்திட்டத்தின் கீழ் சென்னை ஐ.ஐ.டி.யில் 15 சிறப்பு மையங்கள் தொடக்கம்.

சென்னை,

உயர் கல்வி நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், பயிற்றுவித்தல் மற்றும் ஆராய்ச்சியில் கல்வி நிறுவனங்கள் உலகத்தரத்தில் மேம்படுவதற்கு உதவி புரியும் வகையிலும் மத்திய அரசு, புகழ்பெற்ற கல்வி நிறுவனத்திட்டத்தை அறிமுகம் செய்தது. புகழ்பெற்ற கல்வி நிறுவனத்திட்டத்தின் ஒரு பகுதியாகவும், ஆராய்ச்சி தொடர்பான நடவடிக்கைகளுக்காகவும் சென்னை ஐ.ஐ.டி., விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வு, ஆற்றல் கூட்டமைப்பு, புற்றுநோய் மரபியல் மற்றும் மூலக்கூறு சிகிச்சைக்கான மையம் உள்பட 15 சிறப்பு மையங்களை தொடங்கியுள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னை ஐ.ஐ.டி.வளாகத்தில் நடந்தது.

சென்னை ஐ.ஐ.டி.யில் தொடங்கி இருக்கும் சிறப்பு மையங்கள், அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கும், இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்குவதற்கும் அதிநவீன ஆராய்ச்சியை மேற்கொள்ளும் வகையில் செயல்படும் என்று கருதப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி, முன்னாள் இயக்குனரும், பேராசிரியருமான பாஸ்கர் ராமமூர்த்தி, சென்னை ஐ.ஐ.டி. டீன் (உலகளாவிய ஈடுபாடு) ரகுநாதன் ரெங்கசாமி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


Next Story