கடத்தி வரப்பட்ட 170 கிலோ புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்


கடத்தி வரப்பட்ட 170 கிலோ புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்
x

கடத்தி வரப்பட்ட 170 கிலோ புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்

தஞ்சாவூர்

தஞ்சை அருகே கடத்தி வரப்பட்ட 170 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து, தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

கண்காணிப்பு பணி

தஞ்சை -திருச்சி சாலையில் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி வருவதாக செங்கிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமோகன் மேற்பார்வையில், செங்கிப்பட்டி இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ரெத்தினசாமி மற்றும் போலீசார் தஞ்சை -திருச்சி சாலையில் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்தினர். செங்கிப்பட்டி அருகில் உள்ள முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலை அருகே கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

170 கிலோ புகையிலை பொட்கள் பறிமுதல்

அப்போது போலீசாரை பார்த்ததும் காரில் இருந்த 2 பேர் காரை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் காரை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் கடத்தி வந்த 170 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story