தகராறில் பெண்கள் உள்பட 4 பேர் மீது தாக்குதல் 2 பேர் கைது


தகராறில் பெண்கள் உள்பட 4 பேர் மீது தாக்குதல்  2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா கண்டகானப்பள்ளி அருகே உள்ள எலசட்டியை சேர்ந்தவர் மல்லேஷ் (வயது 30). அதே ஊரை சேர்ந்தவர் சின்னராஜ் (36). ஊர் நிதி தொடர்பாக அவர்களுக்குள் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மல்லேஷ் தரப்பினரை சின்னராஜ் தரப்பினர் தாக்கியதாக தெரிகிறது. தகராறில் மல்லேஷ், செல்வராஜ், வரலட்சுமி, மாலா ஆகிய 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து மல்லேஷ் கொடுத்த புகாரின்பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னராஜ், ஜெயராமன் (50) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story