பெண் போலீசிடம் நகை பறித்த 2 பேர் கைது - தனிப்படையினருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு


பெண் போலீசிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தனிப்படையினருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்

மதுரை


மதுரை நத்தம் சாலை ரிசர்வ் லைன் ஆயுதப்படை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவருடைய மனைவி வெள்ளியம்மாள் (வயது 31) ஆயுதப்படை போலீஸ்காரர். கடந்த மாதம் 20-ந் தேதி இரவு பீ.பி.குளம் பகுதியில் கடைக்கு சென்று விட்டு வெள்ளியம்மாள் வீட்டிற்கு சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அப்போது அவர் சங்கிலியை இறுக்கமாக பிடித்ததால் 5 பவுன் நகையுடன் கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர். வெள்ளையம்மாள் கையில் 3 பவுன் நகை இருந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் இது தொடர்பாக சிக்கந்தர்சாவடி, கோவில்பாப்பாக்குடி, எஸ்.வி.டி.நகரை சேர்ந்த சந்திரசேகர் என்ற அட்டு (27), முல்லைநகர், அம்பேத்கர் தெருவை சேர்ந்த சையதுஇப்ராகிம் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


Next Story