கிறிஸ்தவ ஆலயத்தில் வெள்ளி கிரீடம் திருடிய 2 பேர் கைது


கிறிஸ்தவ ஆலயத்தில் வெள்ளி கிரீடம் திருடிய 2 பேர் கைது
x

தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயத்தில் வெள்ளி கிரீடம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் முன் பகுதியில் கண்ணாடியால் மூடப்பட்ட தூய மிக்கலே் அதிதூதர் சொரூபம் உள்ளது. இந்த சொரூபத்தின் தலையில் வெள்ளி கிரீடம் அணிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி சொரூபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைக்கப்பட்டு சொரூபத்தின் தலையில் அணிவிக்கப்பட்டு இருந்த வெள்ளி கிரீடம் திருடு போனது. இதுகுறித்து ஆலய நிர்வாகத்தினர் தருவைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் தருவைகுளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கோவிலில் வெள்ளி கிரீடத்தை திருடிய சிலுவைப்பட்டியை சேர்ந்த ராஜேஷ் (47) மற்றும் தாளமுத்துநகரை சேர்ந்த மணிராஜா (38) ஆகிய 2 பேரையும் தருவைகுளம் போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story