கேரள வாலிபர்கள் 2 பேர் கைது

கார் விற்பனை மேலாளரிடம் தகராறில் ஈடுபட்ட கேரள வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி
திருச்சி உறையூர் பாய்க்கார தெருவை சேர்ந்தவர் நிக்கோலஸ் (வயது 40). இவர் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் கார் ஷோரூமில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு புத்தூர் நான்கு ரோடு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டி ருந்தார். அப்போது கேரள மாநிலம் எர்ணாக்குளத்தை சேர்ந்த அகில் (25), திருச்சூரை சேர்ந்த அல்பின் (23) ஆகிய இருவரும் நிக்கோலசை வழி மறித்து லிப்ட் கேட்டனர். அவர்களை காரில் ஏற்ற மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்தனர். இது குறித்து நிக்கோலஸ் உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story