தட்டார்மடம் அருகே 2 புதிய மின்மாற்றிகள் அமைப்பு

தட்டார்மடம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட 2 மின்மாற்றிகள் இயக்கி தொடங்கி வைக்கப்பட்டன.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே பொத்தகாலன்விளை பகுதியில் ரூ.94 லட்சத்தில் 2 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் குருவம்மாள் தலைமை தாங்கினார். தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி, சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி தலைவர் திருக்கல்யாணி, விவசாய நலச்சங்க தலைவர் எட்வின் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் கோட்ட செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வரவேற்றார். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, புதிய மின்மாற்றிகளை இயக்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் பேச்சிமுத்து, முத்துகிருஷ்ணன், ஜெயக்குமார், ரவிந்திரகுமார், ரோஸ்லீன், உதவி பொறியாளர்கள் சுஜா, ராதாமணி, எட்வர்ட், ஜெயபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி செயற்பொறியாளர் ராம்மோகன் நன்றி கூறினார்.