கோபியில் மோட்டார்சைக்கிள்- ஸ்கூட்டர் திருடிய 2 பேர் கைது


கோபியில் மோட்டார்சைக்கிள்- ஸ்கூட்டர் திருடிய 2 பேர் கைது
x

கோபியில் மோட்டார்சைக்கிள்- ஸ்கூட்டர் திருடிய 2 பேர் கைது

ஈரோடு

கடத்தூர்

கோபி போலீசார் வேட்டைக்காரன் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் சந்தேகப்படும் வகையில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர்கள் திருப்பூர் மாவட்டம் பூண்டியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 20), அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் (27) என்பதும், அவர்கள் 2 பேரும் கோபி மற்றும் வரப்பாளையம் பகுதியில் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் திருடியது,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 2 மோட்டார்சைக்கிள் மற்றும் ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story