வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
x

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

விருதுநகர்

சிவகாசி,

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

பெண் தற்கொலை

சிவகாசி அருகே உள்ள கட்டளைப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் நாகேந்திரகனி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது38). இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் உள்ளவர்களிடம் கிருஷ்ணவேணி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த அவர், படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் மாரியம்மாள் மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணி அரசரடி காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (33). இவருடைய மனைவி சித்திரை செல்வி (30).

மாரிமுத்து குடிப்பழக்கம் காரணமாக சம்பள பணத்தை வீட்டுக்கு கொடுக்காமல் செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சித்திரை செல்வி கணவரை பிரிந்து தகப்பனார் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் மாரிமுத்து வீட்டில் தூக்கில் தொங்குவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். அதன்பேரில் சித்திரை செல்வி அங்கு சென்று பார்த்தபோது சேலையால் மாரிமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story