மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு தீவிர நோய் எதுவும் இல்லை: ஓ பன்னீர் செல்வம்


மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு தீவிர நோய் எதுவும் இல்லை: ஓ பன்னீர் செல்வம்
x
தினத்தந்தி 3 March 2017 1:37 PM IST (Updated: 3 March 2017 1:37 PM IST)
t-max-icont-min-icon

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு தீவிர நோய் எதுவும் இல்லை என்று ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 

*முதலமைச்சர் பதவியிலிருந்து விலகக் கோரி எனக்கு பல தரப்பிலிருந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது 
*ஜெயலலிதாவை வெளிநாட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றோம் அதற்கு அனுமதிக்கவில்லை
*ஜெயலலிதாவிற்கு தீவிர நோய் எதுவுமில்லை.
*மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.

*ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் தீரும் வரை மக்களின் போராட்டம் தீராது
*ஜெயலலிதாவின் மரணத்தில் தமிழக மக்களுக்கு சந்தேகம் உள்ளது.
*உயிருடன் இருக்கும் வரை சசிகலா உறவினர்களை கட்சியில் அனுமதிக்க மாட்டேன் என ஜெயலலிதா கூறினார்.
இவ்வாறு அவர் பேசினார்.


Next Story