முதல்-மந்திரி கொண்டு வந்த மசோதாவுக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கொண்டு வந்த மசோதாவிற்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மும்பை,
அரசு பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கொண்டு வந்த மசோதாவிற்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டதிருத்த மசோதா
மராட்டியத்தில் நோயாளிகளின் உறவினர்களால் டாக்டர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக டாக்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். அரசு பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் குற்றவாளிகளுக்கு தற்போதைக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது. இந்த ஜெயில் தண்டனையை 5 ஆண்டுகளாக உயர்த்தும் வகையில் நேற்று முன்தினம் நடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்தார்.
அந்த மசோதா மீது நேற்று சட்டசபையில் விவாதம் நடந்தது. அப்போது ஆளும் கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், சட்ட திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆஷிஸ் செலார் எம்.எல்.ஏ. (பா.ஜனதா) பேசும்போது, “நாம் எல்லாம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள். மக்கள் பிரச்சினைகளுக்காக போராட வேண்டியது நமது கடமை. இதுபோன்ற சூழ்நிலையில் அரசு பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்தாலும், இந்த சட்ட திருத்தத்தின் கீழ் மக்கள் பிரதிநிதிகள் மீது கூட வழக்குப்பதிவு செய்ய வழிவகை செய்யப்படுகிறது. மேலும் செசன்ஸ் கோர்ட்டில் மட்டுமே ஜாமீன் பெற முடியும்” என்றார்.
சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்
சந்திரதீப் நர்கே எம்.எல்.ஏ. (சிவசேனா) பேசுகையில், “இந்த சட்ட திருத்த மசோதா பொதுமக்களின் உரிமைகளை காக்கும் வகையில் இருக்க வேண்டும். எனவே இந்த மசோதாவை சட்டசபை கூட்டு குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.
இதேபோல சிவசேனாவை சேர்ந்த ஜெயபிரகாஷ் முண்டே, சாம்பராஜே தேசாய் போன்ற உறுப்பினர்களும், இந்த சட்டதிருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
இதற்கிடையே நேற்று சட்டசபையில் நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பத்திரிகையாளர்களை பாதுகாக்க அவர்கள் மீதான தாக்குதலை தடுக்கும் வகையில், இந்த கூட்டத் தொடரிலேயே சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றார்.

Next Story