சச்சின் என்பவர் பேசும் போது ஐ-போன் வெடித்து படுகாயம்


சச்சின் என்பவர் பேசும் போது ஐ-போன் வெடித்து படுகாயம்
x
தினத்தந்தி 2 Jun 2017 5:46 PM IST (Updated: 2 Jun 2017 5:45 PM IST)
t-max-icont-min-icon

ஐ-போன் வெடித்து சச்சின் என்பவர் போனில் பேசிக்கொண்டிருந்தபோது வெடித்து படுகாயம் அடைந்தார்.

திருவாரூர் அருகே முகந்தனூரை சேர்ந்தவர் சச்சின் இவர்  தனது ஐபோனில் பேசிகொண்டு இருந்தார். அப்போது போன் டமார் என்ற சத்ததுடன் வெடித்தது. இதில்  சச்சினின் முகம், காது பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.  உடனடியாக சச்சின் சிகிச்சைக்காக திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

முன்னர் சாம்சங் நிறுவன மொபைல் வெடித்துச் சிதறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய ஐபோன் வெடித்துச் சிதறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story