தலைமை செயலகத்தின் அனைத்து அலுவலக அறையிலும் எடப்பாடி பழனிசாமி படம்


தலைமை செயலகத்தின் அனைத்து அலுவலக அறையிலும் எடப்பாடி பழனிசாமி படம்
x
தினத்தந்தி 6 Jun 2017 3:04 AM IST (Updated: 6 Jun 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் அலுவலகங்கள் உள்பட அனைத்து அலுவலக அறைகளிலும் முதல்–அமைச்சரின் உருவ படத்தை பிரேம் செய்து மாட்டுவது வழக்கம்.

சென்னை,

ஆட்சி அமைத்து 100 நாட்களை தாண்டியும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படம் அந்த அலுவலகங்களில் மாட்டப்படவில்லை.

எனவே, இதுகுறித்து கடந்த வாரம் உயர்மட்ட அளவில் பேசப்பட்டது. அந்த கூட்டத்தில் முதல்–அமைச்சரின் படம் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டது. அந்த படத்தை நூற்றுக்கும் மேலாக பிரேம் செய்து தலைமை செயலகத்துக்கு நேற்று கொண்டு வந்தனர்.

நேற்று தலைமை செயலகத்தின் அனைத்து அலுவலகங்களிலும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படம் தொங்க விடப்பட்டது. அந்த அலுவலகங்களில் ஏற்கனவே மாட்டப்பட்டிருந்த மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் படமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story