எம்.எல்.ஏக்களுக்கு பேரம் பேசப்பட்டது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம், எம்.எல்.ஏ.சரவணன் விளக்கம்


எம்.எல்.ஏக்களுக்கு பேரம் பேசப்பட்டது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம், எம்.எல்.ஏ.சரவணன் விளக்கம்
x
தினத்தந்தி 13 Jun 2017 8:30 AM GMT (Updated: 13 Jun 2017 8:30 AM GMT)

எம்.எல்.ஏக்களுக்கு பேரம் பேசப்பட்டது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம், எம்.எல்.ஏ.சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.


சென்னை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பண பேரம் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான வீடியோ ஆதாரத்தை ‘டைம்ஸ் நவ்’ ஆங்கில தொலைக் காட்சி ஒளிபரப்பியது.

மூன் டி.வி.யின் செய்தியாளர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மதுரை எம்.எல்.ஏ. சரவணனையும், எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த கனகராஜ் எம்.எல்.ஏ.வையும் சந்தித்து உரையாடி இருக்கிறார்.

சசிகலா அணி எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.10 கோடி வரை பணம் கொடுக்கப்பட்டதாக பூதாகரமான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க. வில் அடுத்தது என்ன? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை அணி சேர்க்க கோடிக்கணக்கில் லஞ்சம் தர பேரம் பேசப்பட்டதாக கூறியது குறித்து எம்.எல்.ஏ சரவணனிடம் விளக்கம் கேட்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இதை தொடர்ந்து சரவணன் எம்.எல்.ஏ ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தார். 

Next Story