ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளிய கொடுமை நடந்து முடிந்துவிட்டது -ஸ்டாலின் பேச்சு


ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளிய கொடுமை நடந்து முடிந்துவிட்டது -ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 13 Jun 2017 7:42 PM IST (Updated: 13 Jun 2017 7:42 PM IST)
t-max-icont-min-icon

ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளிய கொடுமை நடந்து முடிந்து விட்டது மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் நடைபெறும் திமுக கருத்தரங்கில், செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டுமென திமுக கோரியது எதற்கு என்பது குதிரை பேரம் புகார் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.  ஆட்சியை கலைக்க நாங்கள் முயற்சிக்கவில்லை, அவர்களை அவர்களே கவிழ்த்துக்கொள்ளும் அளவு நடந்து வருகிறார்கள்.

ஆட்சியில் இல்லாவிட்டாலும் ஏரிகளை தூர்வாருவது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டு, ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளிய கொடுமை நடந்து முடிந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story