சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க எம்.எல்.ஏக்கள் கைது


சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க எம்.எல்.ஏக்கள் கைது
x
தினத்தந்தி 14 Jun 2017 12:34 PM IST (Updated: 14 Jun 2017 12:34 PM IST)
t-max-icont-min-icon

சட்டசபையில் இருந்து வெளியேற்றபட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று காலை தொடங்கியது. சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், 'எம்.எல்.ஏ சரவணனின் வீடியோ காட்சிகள்' குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என் கோரினார்.எம்.எல்.ஏ. வீடியோ விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க முடியாது என சபாநாயகர் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை மறுக்கப்பட்டதால் தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் விவாதிக்க முடியாது என சபாநாயகர் விளக்கம் அளித்தார்.சபைக்கு கட்டுப்படுங்கள், இல்லா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே ஜி.எஸ்.டி. சட்ட முன்வடிவு தாக்கல் செய்யபட்டது. வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி மசோதாவை தாக்கல் செய்தார்.சட்டசபியில் வனத்துறை மானியக்கோரிக்கை மீது பேரவையில் விவாதம் தொடங்கி நடந்து வருகிறது.

சரவணன் எம்.எல்.ஏ வீடியோ தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவர  வலியுறுத்து தொடர்ந்து  அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் உத்த்ரவின் பேரில் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.பின்னர் தி.மு.க எம்.எல்.ஏக்களும் வெளியேற்றபட்டனர்.

சட்டசபையில் இருந்து மு.க ஸ்டாலின் வெளியேற்றபட்டதால் சட்டசபை வளாகம் முன் தி.மு.க உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில்,ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story