3 மாவட்டங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம் தமிழ்நாடு வனத்துறை துரித நடவடிக்கை

3 மாவட்டங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது.
சென்னை,
கடந்த ஆண்டு (2016) டிசம்பர் மாதம் 12-ந்தேதி ‘வார்தா’ புயலின் கோரத்தாண்டவத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் சிக்கி பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன.
குறிப்பாக இயற்கையின் கொடையான மரங்கள் இந்த புயலுக்கு இறையாகின. இதனால் 3 மாவட்டங்களும் பசுமையை இழந்து போனது. பசுமையை மீண்டும் மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு வனத்துறைக்கு ஆணை பிறப்பித்தது.
அந்த ஆணையின்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டு, அதற்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
3 வகைகளில் இந்த திட்டத்தை வனத்துறை செயல்படுத்த இருக்கிறது. அதில் முதல் வகையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் சாலை ஓரங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் மரக்கன்றுகள் நடுகின்றனர்.
2-வது வகையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகியவற்றை ஒட்டியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலும் 3-வது வகையாக பொதுமக்களுக்கு ரூ.10 விலையில் மரக்கன்றுகள் விற்பனை செய்யப்பட்டு வீடுகளில் நடுவதற்கும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இதற்காக சென்னையில் தாம்பரத்தை அடுத்த படப்பை, வேளச்சேரி, அண்ணாநகர் ஆகிய 3 இடங்களில் மரக்கன்றுகள் வளர்க்கும் பணி கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.
முதல்கட்டமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் 80 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கான பணிகளில் வனத்துறை மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சென்னையில் மட்டும் 18 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
வார்தா புயலில் வண்டலூர் பூங்கா மிகவும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து, வண்டலூர் பூங்காவின் இயற்கை அழகு சிதைந்து போய் இருக்கிறது. அதை மீட்டு எடுக்கும் வகையில், 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
அதில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் சென்னை சரக வனத்துறை சார்பில் நடப்படுகிறது. மீதமுள்ள 20 ஆயிரம் மரக்கன்றுகள் வண்டலூர் பூங்கா சார்பில் நடப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் வார்தா புயலில் இழந்த பசுமையை மீட்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வனத்துறையை கேட்டுக்கொண்டது. அதன்படி, தற்போது நாங்கள் முழுவீச்சில் ஈடுபட்டு இருக்கிறோம். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 5 லட்சத்து 32 ஆயிரம் மரங்களை நட இருக்கிறோம்’ என்றனர்.
செங்கல்பட்டு ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஒரு லட்சத்து 30 ஆயிரம், சென்னை-செங்கல்பட்டு வரை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 30 ஆயிரம் மரக்கன்றுகள், திருவள்ளூரை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்.
ரூ.10 விலையில் 2 லட்சத்து 62 ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 2 ஆயிரம், திருவள்ளூரில் 50 ஆயிரம், காஞ்சீபுரத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
ஆக மொத்தம் இந்த 3 மாவட்டங்களிலும் 5 லட்சத்து 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
புங்கை, பாதாம், வேம்பு, நாவல், இழுப்பை, கடம்ப மரம், புன்னை, பூவரசு, மகாகனி, அரச மரம், மகிழம், அயல் வாகை, ஈட்டி, அத்தி, காட்டு வாகை, வேங்கை, நெல்லிக்கனி, மாதுளை, செம்மரம், தேக்கு ஆகிய வகை மரங்கள் நடப்படும்.
மரக்கன்றுகள் கிடைக்கும் இடங்கள் எவை?
பொதுமக்களுக்கு ரூ.10 விலையில் மரக்கன்றுகள் வனத்துறை சார்பில் விற்பனை செய்யப்படும் இடங்களின் விவரம் வருமாறு:-
* வேளச்சேரி சோதனைச்சாவடி அருகில் உள்ள வனத்துறை நர்சரி.
* நன்மங்கலம், சந்தோஷபுரம் அருகில் உள்ள வனத்துறை நர்சரி.
* தாம்பரத்தை அடுத்த படப்பையில் உள்ள வனத்துறை நர்சரி.
* அண்ணாநகர் ஜி பிளாக் 2-வது தெருவில் உள்ள வனத்துறை நர்சரி.

Related Tags :
Next Story