அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி செல்கின்றனர்

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி செல்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளார்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இருதரப்பினரும் சந்தித்து, இரு அணிகளும் இணைய உள்ளது. 7.30 மணியளவில் இரு அணிகள் இணைப்பு நடைபெறுகிறது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி செல்கின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிங்கப்பட்டு உள்ளது. இரு இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், “சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்” என்ற 2 கோரிக்கைகளை பிரதானமாக வைத்தனர். எடப்பாடி பழனிசாமி அணியில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை, கட்சியை விட்டு ஒதுக்கிவைப்பதாக அறிவித்தனர். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சசிகலாவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story