அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ள மாட்டோம் தங்கதமிழ் செல்வன்


அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ள மாட்டோம் தங்கதமிழ் செல்வன்
x
தினத்தந்தி 4 Sept 2017 11:43 AM IST (Updated: 4 Sept 2017 11:43 AM IST)
t-max-icont-min-icon

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ள மாட்டோம் என தங்கதமிழ் செல்வன் எம்.எல்.ஏ கூறினார்.

சென்னை

அனிதா இறுதி சடங்கிற்கு ஈபிஎஸ்- ஓபிஎஸ் அமைச்சர்கள் செல்லாதது ஏன்? நாளை நடைபெறும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ள மாட்டோம். இன்னும் 2 நாட்களில் ஆளுநர் எங்களை அழைத்து பேசுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

அனிதா குடும்பத்தினரை சந்திக்க முதலமைச்சருக்கும் , துணை முதலமைச்சருக்கும் துணிச்சல் இல்லை. முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற உடன்பாட்டில் 21 எம்.எல்.ஏக்களும் ஒற்றுமையாக உள்ளோம். மாநில பாடத்திட்டம் மூலம் மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. சொகுசு விடுதியில் எம்.எல்.ஏக்கள் குறைந்து உள்ளார்கள் என்பது தவறானது அவர்கள் சொந்த வேலை காரணமாக வெளியே சென்று உள்ளனர். ஆளுநர் அழைக்காவிடில் 2 நாள் கழித்து கூடி முடிவு எடுப்போம்.

Next Story