நீட் தேர்வில் விலக்கு அளிக்கக்கோரி 12-ந்தேதி பா.ம.க. போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

ஏற்கனவே அறிவித்தபடி 12-ந் தேதி பா.ம.க. போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வுக்கு எதிராக சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையிலோ, இயல்பு வாழ்க்கையை குலைக்கும் வகையிலோ பந்த் போன்ற போராட்டங்களை நடத்தக்கூடாது. அமைதி வழியில் போராடுவதும், ஆர்ப்பாட்டம் நடத்துவதும் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை ஆகும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து காவல்துறை விடுத்த மிரட்டல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெறவிருந்த போராட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் வரும் 12-ந்தேதி பா.ம.க. சார்பில் நடத்தப்பட இருந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என சென்னை காவல்துறை அதிகாரப்பூர்வமற்ற வகையில் அழுத்தம் தரப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு வெளியான பிறகும் கூட நீட்டுக்கு எதிரான போராட்டங்கள் குறித்த நிலையை காவல்துறை தெளிவுபடுத்தவில்லை. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் நிலைப்பாடு சரியல்ல.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தான் தமிழ்நாடு அரசும், ஆளுங்கட்சியும் கூறி வருகின்றன. அந்த வகையில் பார்த்தால் தமிழக அரசின் போராட்டத்தை மாணவர்களும், பொது மக்களும் நடத்தி வருகின்றனர். சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பில்லாத வகையில் நடத்தப்படும் இந்த போராட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மாறாக, நீட்டுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்வதும், மிரட்டல் விடுப்பதும் ஏற்கத்தக்கதல்ல. இந்தப் போக்கை மாற்றிக் கொண்டு மாணவர்களும், மக்களும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும்.
பா.ம.க. ஏற்கனவே அறிவித்தவாறு நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி வரும் 12-ந்தேதி சென்னையில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story