விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை முதல்-அமைச்சர் உத்தரவு
கனடா நாட்டில் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
உலக அளவிலான உயரம் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 3 வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
3 தங்கப்பதக்கம் வென்ற கணேசனுக்கு ரூ 15 லட்சம், 1 தங்கம் மற்றும் 2 வெள்ளிப்பதக்கம் வென்ற மனோஜ்-க்கு ரூ 11 லட்சம் மற்றும் 1 தங்கம் வென்ற செல்வராஜூக்கு ரூ 5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். பயிற்சியாளர் ரஞ்சித்குமாருக்கு ரூ 3.90 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் மேலும் சாதனை படைத்து நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story