டாஸ்மாக் பணியாளர்களுக்கு 30 சதவீதம் தீபாவளி போனஸ் அரசுக்கு கோரிக்கை


டாஸ்மாக் பணியாளர்களுக்கு 30 சதவீதம் தீபாவளி போனஸ் அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 15 Sept 2017 1:45 AM IST (Updated: 15 Sept 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை,

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கு.பால்பாண்டியன், துணைத்தலைவர் ஜி.வி.ராஜா, அமைப்பு செயலாளர் காமராஜன், பிரசார செயலாளர் கோதண்டம் ஆகியோர் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சில்லரை மதுபான விற்பனை கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி சமயத்தில் போனஸ் வழங்குவது நடைமுறையில் இருந்து வருகிறது. நடப்பாண்டில் பல்வேறு காரணங்களால் 40 சதவீதம் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டு இருந்த போதிலும் சில்லரை மதுபான விற்பனை எவ்விதத்திலும் குறையாமல் கடந்த ஆண்டை காட்டிலும் விற்பனை அதிகரித்துள்ளது. அதற்கு பணியாளர்களின் கடுமையான உழைப்பும் அடிப்படை காரணமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின் கீழ் செயல்படும் சில்லரை மதுபான விற்பனை கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பணியாளர்களின் நலன் கருதி, கேரள மாநிலத்தில் மதுபான கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 30 சதவீதம் போனஸ் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளதை போன்று தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் பணியாளர்களுக்கு 30 சதவீதம் போனஸ் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story