டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஏழுமலை மீது தாக்குதல் உதடுகள் கிழிந்தன

டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஏழுமலை மீது பன்னீர்செல்வம் ஆதரவாளர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள பூந்தமல்லி எம்.எல்.ஏ ஏழுமலை, திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள உட்கோட்டை கிராமத்துக்கு, ஒரு துவக்க நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்து காரில் திரும்பிக்கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த நைனா கண்ணு என்ற அ.தி.மு.க தொண்டர், ஏழுமலையின் காரை உருட்டுக்கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதில் கார் கண்ணாடி உடைந்து, ஏழுமலையின் இரு உதடுகளும் கிழிந்தன. இதைத் தொடர்ந்து, ஏழுமலை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய நைனா கண்ணை போலீஸார் தேடி வருகின்றனர். நைனா கண்ணு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story