தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் கவர்னருக்கு எதிராக தி.மு.க அறவழி ஆர்ப்பாட்டம்-மு.க ஸ்டாலின் அறிவிப்பு

தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் கவர்னருக்கு எதிராக ஆய்வுக்குச் செல்லும் மாவட்டங்கள் அனைத்திலும் தி.மு.க அறவழி ஆர்ப்பாட்டம் நடத்தும் என மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்திருப்பது, ‘ராஜ்பவன்’ மத்திய பா.ஜ.க. அரசின் அரசியல் நடவடிக்கைகளுக்கு தீவிரமாகவும் பரவலாகவும் பயன்படுத்தப்படுகிறதோ என்ற பலத்த சந்தேகத்தை எழுப்புவ தோடு, “இது ஆய்வு அல்ல, வெளிப்படையான அரசியல்”,என்பதை உணர்த்துகிறது.
“மாநில சுயாட்சி-மத்தி யில் கூட்டாட்சி”எனும் மாபெரும் முழக்கம் ஓங்கி ஒலிக்கும் தமிழ் மண்ணில், அதற்கு நேரெதிராக நடை பெறும் இதுபோன்ற
நடவடிக்கைகளுக்கு, தி.மு.க. வின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாவட்டங்களில் ஆய்வு செய்யும் “அரசியல் பணியை”ஆளுநர் உடனடியாகக் கைவிட்டு, இப்போது நடைபெற்று வரும் மக்கள் விரோத மைனாரிட்டி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்- அமைச்சருக்கு உத்தரவிட முன் வரவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
பெரும்பான்மை உள்ளவர் தான் மாநிலத்தின் முதல்- அமைச்சராக நீடிக்க வேண்டும் என்பதை உறுதி செய் யும் தன் அரசியல் சட்டக் கடமையை நிறைவேற்றாமல், மாவட்ட ரீதியாக இப்படிப் பட்ட ஆய்வுகளை இனி மேலும் தொடர்ந்து மாநில சுயாட்சி கொள்கை யையும் இந்திய நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தையும் வலுவிழக்க வைக்க முயன்றால், இனிவரும் காலங்களில் ஆளுநர் ஆய்வுக்குச் செல்லும் மாவட்டங்கள் அனைத்திலும் தி.மு.க.வின் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டிய நிலை உருவாகும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story