எப்போது தேர்தலை அறிவித்தாலும் அதை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தல் ஆணையம் எப்போது தேர்தலை அறிவித்தாலும் அதை எதிர்கொள்ள தயார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பள்ளிக்கரணையில் அசாம் விருந்தினர் மாளிகை கட்டட திறப்பு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:
அசாமில் இருந்து படிப்பிற்காக தமிழகம் வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மருத்துவ தேவைக்காக அசாம் மாநிலத்தவர் தமிழகம் வருவதும் அதிகரித்துள்ளது.
தேர்தல் ஆணையம் எப்போது தேர்தலை அறிவித்தாலும் அதை எதிர்கொள்ள தயார். 20 தொதிகளிலும் மீண்டும் வெற்றி பெற்று அதிமுக நிரூபிக்கும். இயற்கை இடர்பாடுகளை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. திமுக சந்தர்ப்பவாத கட்சி, எப்போது வேண்டுமானாலும் தனது எண்ணத்தை மாற்றலாம்.
இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.
Related Tags :
Next Story