பாரத நாட்டை வழிநடத்த தகுதி படைத்தவர் பிரதமர் மோடி -பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

பாரத நாட்டை வழிநடத்த தகுதி படைத்தவர் பிரதமர் மோடி என்று பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
சென்னை,
சென்னை கிளாம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-
பாரத நாட்டை வழிநடத்த தகுதி படைத்தவர் பிரதமர் மோடி. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து, அபிநந்தனை விரைவாக மீட்டவர் பிரதமர் மோடி. இதன் மூலம் பிரதமர் மோடி வரலாறு படைத்துள்ளார்.
திமுக ஆட்சியில் இருந்தபோது நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. எதிர்கட்சியினர் எங்கு தேடினாலும் தகுதியான ஒரு பிரதமர் வேட்பாளர் கிடைக்கவில்லை.
பிரதமர் மோடி இருப்பதால்தான் நாட்டில் மக்கள் எல்லோரும் நிம்மதியாக இருக்கிறார்கள். மக்கள் சந்தோசமாக வாழ மோடி தான் காரணம். அண்டை நாடு நம்மை தாக்குகிறது. அண்டை நாடு தினமும் நம்மை தொடர்ந்து அச்சுறுத்துகிறது. புல்வாமாவில் தீவிரவாதிகள் மோசமாக தாக்கினார்கள்.
மக்கள் எல்லோரும் புல்வாமா தாக்குதலால் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் மோடி உடனடியாக செயல்பட்டு தீவிரவாத முகாம்களை அழித்தார்.
பல்வேறு நலத்திட்டங்களை பாஜக தமிழகத்தில் தொடங்கி உள்ளது. விவசாயிகளுக்காக மோடி அரசு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
பிரதமர் சிறுகுறு விவசாயிகளுக்கு நலம் பெற நிறைய திட்டம் கொண்டு வந்துள்ளனர். கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்டனர், இப்போது அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதா மாதம் பணம் அளிக்கப்பட உள்ளது.
ஏழை மக்களுக்கு ரூ.2000 கொடுப்பது தவறா? ஒரு ஏழை விவசாயிக்கு பணம் கொடுப்பது தவறா? ஸ்டாலின் எங்கள் கூட்டணியை விமர்சிக்கிறார். தீய சக்திகளை எதிர்கொள்ள வெற்றி கூட்டணி அமைத்திருக்கிறோம்.
சென்னையில் ராகுலை பிரதமர் என கூறிய ஸ்டாலினுக்கு கொல்கத்தாவில் அதை சொல்ல தைரியமில்லை. எங்கள் கூட்டணியை மக்கள் விரோத கூட்டணி என்கிறார். எங்கள் கூட்டணியில் பலர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
பிரதமரை மீண்டும் தேர்வு செய்ய உழைப்போம்.
இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.
Related Tags :
Next Story