7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி மனித சங்கிலி அற்புதம்மாள் தலைமையில் பல்வேறு கட்சியினர் பங்கேற்பு

7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி சென்னையில் அற்புதம்மாள் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
சென்னை,
7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி சென்னையில் அற்புதம்மாள் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
மனிதசங்கிலி போராட்டம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் மனிதசங்கிலி போராட்டம் நடந்தது.
இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், தமிழ் பேரரசு கட்சி தலைவர் கவுதமன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பாக்கியராசன், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தோழர் தியாகு, நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், மனோபாலா, டைரக் டர்கள் அமீர், வெற்றிமாறன், ராம், களஞ்சியம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கி.வீரமணி
போராட்டத்தின்போது கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகியிருக்கும் 7 பேரும் தங்கள் வாழ்நாளின் முக்கியமான காலகட்டத்தை சிறையிலேயே கழித்துவிட்டனர். தமிழக அரசு நினைத்தால் இந்த 7 பேரையும் விடுதலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டே கூறியது. கடந்த ஆண்டு 7 தமிழர்கள் விடுதலை குறித்த தீர்மானத்தை சட்டசபையில் இயற்றி கவர்னரின் பரிந்துரைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஆனாலும் இந்த தீர்மானத்தின் மீது கையெழுத்திடுவதில் கவர்னர் காலதாமதம் செய்து வருகிறார். இது நியாயம் ஆகாது. எனவே கவர்னர் விரைந்து இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டு உடனடியாக சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story