முகிலன் வழக்கு; 17 தனிப்படையினர் 251 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதாக சிபிசிஐடி தகவல்

முகிலன் வழக்கில் 17 தனிப்படையினர் 251 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.
சமூக செயற்பாட்டாளர் முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி ஹென்றி திபேன் தொடர்ந்த ஆள்கொணர்வு மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சிபிசிஐடி விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ரெயில் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை தொடர்ந்து தேடிவருகிறோம். முகிலன் பயன்படுத்திய மேலும் 2 செல்போன் விவரங்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகிலனின் செல்போன் சிக்னல்கள் மூலம் அவர் சென்ற இடங்களை விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் கேட்டுள்ளது.
ஏப்ரல் 8-ல் அடுத்த அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.
Related Tags :
Next Story