ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை டெப்பாசிட் இழக்க செய்வதே அதிமுகவின் குறிக்கோள் - அமைச்சர் செல்லூர் ராஜூ


ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை டெப்பாசிட் இழக்க செய்வதே அதிமுகவின் குறிக்கோள் - அமைச்சர் செல்லூர் ராஜூ
x
தினத்தந்தி 24 March 2019 2:41 PM GMT (Updated: 2019-03-24T20:11:58+05:30)

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை டெப்பாசிட் இழக்க செய்வதே அதிமுகவின் குறிக்கோள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமைச்சர் செல்லூர் ராஜூ  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேனி மக்களவை தொகுதியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை டெபாசிட் இழக்க செய்வதே அதிமுகவின் குறிக்கோள். அரசியலில் தரமும், தராதரமும் இல்லாதவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஈரோட்டில் பிறந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் தேனி மக்களுக்காக என்ன செய்துவிடப் போகிறார்?
தங்க தமிழ்ச்செல்வனுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் அதிமுக பற்றி பொய்ப் பரப்புரை செய்கிறார் என விமர்சனம் செய்துள்ளார்.

Next Story