புதுச்சேரி துணை நிலை கவர்னரை திரும்ப பெற வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


புதுச்சேரி துணை நிலை கவர்னரை திரும்ப பெற வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 May 2019 3:56 PM GMT (Updated: 2019-05-10T21:26:06+05:30)

புதுச்சேரி துணை நிலை கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, மே.11–

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி அரசின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க மறுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்ட புதுச்சேரி துணை நிலை கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story