நடிகர் சஞ்சய் தத்தை விடுவித்தது போல 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் சீமான் வலியுறுத்தல்

நடிகர் சஞ்சய் தத்தை விடுவித்தது போல 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் இந்திய ஆயுதச்சட்டத்தில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்ட பின்பும், மராட்டிய மாநில அரசே விடுதலை செய்துள்ள தகவலானது பேரறிவாளன் விண்ணப்பித்த தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
சட்டமும், நீதியும் அனைவருக்கும் சமம் எனும் அரசியலமைப்புச் சாசனத்தின் அடிநாதத்தையே புறந்தள்ளி சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி? 7 தமிழர்களுக்கு ஒரு நீதி? எனப் பாகுபாடு காட்டுவது தனிமனித வஞ்சம் தீர்க்கச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அதிகார அத்துமீறல். அதனை ஜனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்ட, நீதியின்பால் நம்பிக்கை கொண்ட எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே, சஞ்சய் தத் வழக்கில் மத்திய அரசு விடுதலையை நிராகரித்தபோதும் மாநில அரசே தண்டனைக்கழிவு வழங்கி விடுதலையை தந்த நடைமுறையை பின்பற்றி, தமிழக அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தண்டனை கழிவு வழங்கி 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story