தமிழகத்துக்கு எதிரான திட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்பேன் வைகோ பேட்டி


தமிழகத்துக்கு எதிரான திட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்பேன் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 11 July 2019 11:11 PM IST (Updated: 11 July 2019 11:11 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்துக்கு எதிரான திட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்பேன் வைகோ பேட்டி

சென்னை, ,

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சண்முகம், வக்கீல் வில்சன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்கான சான்றிதழை சட்டசபை செயலாளரிடம் இருந்து அவர்கள் பெற்றனர்.

சான்றிதழை பெற்ற பின்னர் சட்டசபை வளாகத்தில் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழ் இனத்தை, தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கும், ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்தாக உருவாகி வருகிற மதச்சார்பின்மையை தகர்க்கின்ற இந்துத்துவ சக்திகளின் படையெடுப்பை தகர்த்து முறியடிப்பதற்கும், கூட்டாட்சி தத்துவத்தை வெற்றி பெற செய்வதற்கும், தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை எதிர்த்து குரல் கொடுக்கவும் கிடைக்கின்ற வாய்ப்பை நான் பயன்படுத்துவேன். அண்ணாவின் குரல் ஒலித்த அவையில், அண்ணாவின் கொள்கைகளை, அவருடைய லட்சிய கனவுகளை எடுத்து சொல்வதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story