மாநில செய்திகள்

சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களில் கூடிய விரைவில் மின்சாரப் பேருந்துகள் + "||" + In the cities of Chennai, Madurai and Coimbatore Electric buses as soon as possible

சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களில் கூடிய விரைவில் மின்சாரப் பேருந்துகள்

சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களில் கூடிய விரைவில் மின்சாரப் பேருந்துகள்
சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களில் கூடிய விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, போக்குவரத்து துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை

அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த இயக்குநர் குழு கூட்டம் தலைமைச் செயலகத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.

இதில் மாநகரம், விரைவு மற்றும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், புதிய அறிவிப்புகளை செயல்படுத்துதல், புதிய பேருந்துகளின் இயக்கம், வசூல் நிலவரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

அப்போது பேசிய போக்குவரத்து துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,160 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஆயிரத்து 881 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அவற்றை நல்ல முறையில் பராமரித்து வருவாயைப் பெருக்க கேட்டுக் கொண்டார். தற்போது வடிவமைக்கப்பட்டு வரும் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறும் வசதி செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மின்சாரப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக பொதுப்பணி மற்றும் மின்சாரத் துறைகளின் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். முழு அர்ப்பணிப்புடன் தரமான சேவையை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. ரூ.11 லட்சம், 75 சவரன் வரதட்சணை : போதையில் உளறிய மாமா; சிக்கிக்கொண்ட போலி டாக்டர் மாப்பிள்ளை
வில்லிவாக்கத்தில் ஒரு குடும்பத்தையே ஏமாற்றி ரூ.11 லட்சம், 75 சவரன் வரதட்சணை வாங்கி திருமணம் செய்த போலி டாக்டரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
2. சென்னையில் பயங்கரம் : பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் ஹவில்தார் சுட்டுக்கொலை
சென்னை பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் அதிகாரிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் ஹவில்தார் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
3. வாட்ஸ்அப் வீடியோவில் பேசி 600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டி பணம் பறித்த சென்னை என்ஜினீயர் கைது
வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி 600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த சென்னை என்ஜினீயரை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.
4. தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சத்யாவை கட்சி பொறுப்பில் இருந்து நீக்க கோரி அதிமுகவினர் போராட்டம்
தியாகராயநகர் எம்எல்ஏ சத்யாவை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க கோரி அதிமுக தலைமை அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
5. கஞ்சா புகைத்ததை போலீசில் கூறியதால் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி தாக்குதல்..!
கஞ்சா புகைத்தது குறித்து போலீசில் புகார் அளித்தவரை சாலையில் ஓட ஓட விரட்டி தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.