அரசு ஆசிரியர் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர் அறிவுறுத்தல்

அரசு ஆசிரியர்கள் அவர்களின் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆசிரியர் தின விழாவில் அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி,
இன்று புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடந்தது. அங்கு நடந்த விழாவில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி 19 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை வழங்கினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், அவர் ஆசிரிய பெருமக்கள் அவர்களின் திறன்களை மேம்படுத்த விஞ்ஞான யுத்திகளை கற்றுக்கொள்வது அவசியம் என்றும் பேசினார்.
Related Tags :
Next Story