தமிழகத்துக்கு ரூ.2,780 கோடி அமெரிக்கா முதலீடு: எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு கூட்டம் நடத்த தி.மு.க. தயார் - மு.க.ஸ்டாலின் பேச்சு

அமெரிக்கா முதலீடு ரூ.2,780 கோடி தமிழகத்துக்கு வரும் என்று சொன்னால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு கூட்டம் நடத்த தி.மு.க. தயார் என்று திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருப்பூர்,
தி.மு.க. உயர்நிலை திட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சர்களில் ஒருவருமான மு.பெ.சாமிநாதனின் மகன் ஆதவன் - ஸ்ரீநேத்ரா ஆகியோரின் திருமணம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. திருமணத்தை தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நம்முடைய பா.ஜ.க.வின் முன்னணி தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகிறபோது மனம் திறந்து பேசினார். அவர்களை வீழ்த்தி விட்டோம் என்று சொன்னார். நான் அதை கொஞ்சம் திருத்திச் சொல்லுகின்றேன் நாங்கள் உங்களை வீழ்த்தவில்லை, தோற்கடித்திருக்கிறோம் அவ்வளவுதான். நாங்கள் தோற்கடித்தோம் என்று கூட சொல்ல விரும்பவில்லை மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள்.
இன்றைக்கு பொருளாதார சூழ்நிலை எந்த நிலையில் போய்க் கொண்டிருக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியும். கோவை, திருப்பூர் போன்றவை அடங்கிய கொங்கு மண்டலம் இது. இன்றைக்கு தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்படக் கூடிய ஒரு கொடுமை, அதில் பணிபுரிந்து கொண்டிருக்கக் கூடிய தொழிலாளர்கள் அனைவரும் வேலையை இழக்கக்கூடிய ஒரு அக்கிரமம்.
இப்போதுகூட தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு போயிருக்கிறார். முதலீட்டைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு போவதாக அறிவித்து விட்டுப் போயிருக்கிறார். நியாயமாக, ஒரு முதல்-அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தனியாக சென்றிருந்தால் மக்கள் எதிர்பார்ப்போடும், நம்பிக்கையோடும் இருக்கலாம். ஆனால், முதல்-அமைச்சர் மட்டுமா போயிருக்கிறார்?. அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர் கூட செல்லலாம். அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அமைச்சரவையே சென்றிருக்கிறது.
இன்று காலையில் பத்திரிகைகளில் என்ன செய்தியென்றால், ஏறக்குறைய ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு வந்திருக்கின்றது. 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று காலையில் பக்கம் பக்கமாக தலைப்புச் செய்தியாக வந்திருக்கிறது. ரூ.2,780 கோடி முதலீட்டைப் பெற்றிருக்கின்றோம், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கின்றோம், என்று ஒரு செய்தியினை வெளியிட்டு இருக்கின்றார்கள். செய்தியினை வெளியிடுவது மட்டுமல்லாமல், அமெரிக்காவில் முதல்-அமைச்சர் பேசிய பேச்சும் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றது.
என்ன பேசி இருக்கின்றார் என்றால் 2-வது உலக முதலீட்டாளர் மாநாட்டை தமிழ்நாட்டில் நாங்கள் நடத்தினோம். அப்படி நடத்திய நேரத்தில் ஏறக்குறைய ரூ.5 லட்சம் கோடிக்கு முதலீட்டை நாங்கள் பெற்றோம். அந்த முதலீட்டை பெற்ற காரணத்தினால் 220 தொழில்நிறுவனங்கள் பணியைத் துவங்கிவிட்டது என்று ஒரு செய்தியினைச் சொல்லியிருக்கிறார்.
இது ஒரு அப்பட்டமான பொய். நாங்கள் இதைத்தான் கேட்கின்றோம், 220 தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டது என்று ஒரு செய்தியினை, வெளிநாட்டிற்கு சென்று முதல்-அமைச்சர் பேசி இருக்கின்றார் என்றால், எந்த நிறுவனம்? எந்த ஊரில்? எங்கு துவங்கப்பட்டுள்ளது? வெள்ளை அறிக்கையாக வையுங்கள் என்று சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நான் தொடர்ந்து பேசி இருக்கின்றேன். இப்போதும் இந்த திருமண விழாவில் நான் பேசுகின்றேன்.
இப்போது அமெரிக்காவிற்கு சென்று ரூ.2,780 கோடிக்கு முதலீட்டை பெற்றிருக்கின்றோம் என்று பேசியிருக்கின்றார் என்றால், அதை இன்றைக்கு பத்திரிகைகள் படம் பிடித்து பக்கம் பக்கமாகவும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். வந்தால் மகிழ்ச்சிதான். அதனை உள்ளபடியே வரவேற்கின்றோம், பாராட்டுகின்றோம்.
இது உள்ளபடியே வருமென்று சொன்னால், தி.மு.க. சார்பில் நாங்களே முதல்-அமைச்சருக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்துவதற்கு தயாராக இருக்கின்றோம். ஆனால், இது உண்மையா?. எனவே, இதை நாங்கள் பேசினால் என்ன சொல்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டிற்கு முதலீடு பெறுவதை தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் எதிர்த்துப் பேசுகிறார், விமர்சனம் செய்கிறார், முதல்-அமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை கொச்சைப்படுத்தி பேசுகின்றார் என்று ஒரு பிரசாரத்தை தொடர்ந்து செய்துக் கொண்டுவருகிறார்கள்.
முதலீடு வந்தால் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், முதலீடு வரவில்லை. எனவே, எதற்காக இன்றைக்கு அவர்கள் சென்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், இன்றைக்கு நாட்டில் இருக்கும் சூழ்நிலைகளை எல்லாம் மூடிமறைக்க வேண்டும் என்பதற்காக அதில் இருந்து மக்களை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு அந்தப் பணிகளை எல்லாம் இன்றைக்கு செய்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் தான் இன்றைக்கு நாடு போய்க்கொண்டிருக்கின்றது. எனவே, உங்கள் எல்லோரையும் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது நாடாளுமன்றத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அது தொடர்ந்தால்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு விமோசனம் கிடைக்கும். எனவே, அதை நீங்கள் உணர்ந்து, அதற்கேற்ற வகையில் உங்களுடைய ஒத்துழைப்பை நீங்கள் தொடர்ந்து தி.மு.க.வுக்கு வழங்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story