சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 27 கிணறு- குளங்களை காணவில்லை: சென்னை ஐகோர்ட்டில் வழக்கு


சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 27 கிணறு- குளங்களை காணவில்லை: சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 6 Sept 2019 1:52 PM IST (Updated: 6 Sept 2019 1:52 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 27 கிணறு- குளங்களை காணவில்லை என சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை மாநகரின் கடற்கரை பகுதியான ஈஞ்சம்பாக்கத்தில்  தட்டான்கேணி, தீர்த்தன்கேணி, உப்புகேணி ராவுத்தர்கேனி உள்ளிட்ட 27  நீர்நிலைகளை காணவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

27 கிணறு- குளங்கள் எங்கே என்பது குறித்து  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். காணாமல் போன கிணறு- குளங்கள் பற்றி சென்னை மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் வரும் செப்டம்பர் 26-ஆம் தேதிக்குள்  பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Next Story