திமுகவில் பூகம்பம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவில் பூகம்பம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதலமைச்சரான பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக துணை முதலமைச்சரான ஓ. பன்னீர்செல்வம், ஆகியோர் தலைமையில் கட்சி தலைமையகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொனடனர். இதில், தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்துவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நிறைவுக்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நெஞ்சை நிமிர்த்தி நேர்கொண்ட பார்வையாக உள்ளாட்சித்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. திமுகவிற்குள் பூகம்பம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் மனக்குழப்பத்தில் உள்ளார்.
உதயநிதியை முன்னிலைப்படுத்தியதால் வேலூரில் வெற்றி பெற்றதாக திமுகவினர் கூறினர். 2 தொகுதி இடைத்தேர்தல் முடிவில் திமுகவினரால் ஏன் அப்படி கூற முடியவில்லை.
மிசா காலத்தில் கைதான ஸ்டாலினின் பெயர் 2 விசாரணை ஆணையத்திலும் இல்லை. ஸ்டாலின் எந்த விவகாரத்திற்காக கைது செய்யப்பட்டார் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story