அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமரை அழைத்துவர நடவடிக்கை- அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமரை அழைத்துவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை,
மதுரை பகுதியில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் தமிழக அரசின் சாதனையை விளக்க, தொடர் ஜோதி நடைபயணத்தை ஆயிரம் அதிமுக தொண்டர்களுடன், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று காலை மதுரை சிந்தாமணியில் இருந்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர் பி. உதயகுமார், நடிகர்கள் அரசியலுக்கு வரும் விவகாரத்தில் முதலமைச்சர் ஒரு கருத்துச் சொன்னால் அது மிகச் சரியானதாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை என்றும், நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு சிவாஜிகணேசனின் நிலைமைதான் வரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்ன கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை என்றும் அதை தான் வழிமொழிவதாகவும் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடியை அழைத்து வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.
5 நாட்கள் நடைபயணத்தின் போது அந்தந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்கள் பெற்று நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்குகிறார்.
Related Tags :
Next Story