சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை

x
தினத்தந்தி 1 Jan 2020 8:44 AM IST (Updated: 1 Jan 2020 8:44 AM IST)


சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை கனமழை கொட்டியது.
சென்னை,
சென்னையில் இன்று காலை பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. எழும்பூர், புரசைவாக்கம், செண்ட்ரல், கோடம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர், பல்லாவரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
மழை நீர் தாழ்வான இடங்களில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இன்னும் 4 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire