தமிழகத்தில் மழலையர் பள்ளிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர் பலி வாங்கி வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்து உள்ளது. 64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் என 81 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான தியேட்டர்கள், மால்கள் உள்பட பல நிறுவனங்கள் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா முன்னெச்சரிக்கையாக, தமிழகம் முழுவதும் முழுவதும் உள்ள எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 16-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அதேபோல் கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள குமரி, நெல்லை, கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி மாவட்டங்களில் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story