மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்; முதல்வர் பழனிசாமி


மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்; முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 1 April 2020 9:18 AM IST (Updated: 1 April 2020 9:18 AM IST)
t-max-icont-min-icon

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்

சென்னை, 

சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.  தொடர்ந்து கலங்கரை விளக்கத்தில் உள்ள அம்மா உணவகத்திலும் முதல்வர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர், அங்கு சாப்பிட வந்திருந்தவர்களிடம் உணவின் தரம் குறித்து  கேட்டுத் தெரிந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது:- “ டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் விவரம் தெரியாததால் அரசுக்கு தாங்களாகவே தகவல் தெரிவிக்க கோரினோம். தாங்களாகவே முன் வந்து தகவல் அளித்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும். 

இஎம்ஐ வசூல் என்பது மத்திய அரசின் விவகாரம் என்பதால்,  மத்திய நிதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.  நோயின் தீவிரம் தெரியாமல் மக்கள் வெளியே நடமாடுகின்றனர். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  ஏப்ரல் 14-க்கு பிறகு என்ன என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும்.   அம்மா உணவகத்தில் மலிவு விலையில்தான் உணவு வழங்கப்படுகிறது” என்றார். 

Next Story