தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது


தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 12 April 2020 6:04 PM IST (Updated: 12 April 2020 6:04 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை,

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று மாலை  செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”  39,041 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 162 பேர் அரசு முகாமிலும் உள்ளனர்.  58,189 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது.  10,655 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் இன்று மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  11 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பிலிருந்து 50 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டால் அதற்கான செல்வை அரசே ஏற்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


Next Story