ஜனநாயக நாட்டில் உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம்; மு.க ஸ்டாலின் டுவிட்

ஜனநாயக நாட்டில் உதவி செய்யக்கூடாது என்பது சர்வாதிகாரத்தனம் என்று மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரண பொருட்கள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசின் அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால் ஊரடங்கை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிவாரணப்பொருட்களை வழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது என்றும் தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தன்னர்வலர்கள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு நேரடியாக உதவி அளிக்கக்கூடாது என அரசு உத்தரவிடுவது சர்வாதிகாரத்தனம் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:- “ ஊரடங்கு காலத்தில் துயருறும் எளியவர்களின் பசி நீக்க, தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க உத்தரவிட எவராலும் இயலாது; தானும் செய்யாது அடுத்தவர்களையும் தடுப்பது வஞ்சகம்!இது ஜனநாயக நாடு; உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம்! 'கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக!'” என்று பதிவிட்டுள்ளார்.
#Lockdown காலத்தில் துயருறும் எளியவர்களின் பசி நீக்க, தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க உத்தரவிட எவராலும் இயலாது; தானும் செய்யாது அடுத்தவர்களையும் தடுப்பது வஞ்சகம்!
— M.K.Stalin (@mkstalin) April 12, 2020
இது ஜனநாயக நாடு; உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம்!
'கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக!' pic.twitter.com/cVtaHrgvdl
Related Tags :
Next Story