ஊரடங்கால் வேலையின்றி தவிப்பு: முடி திருத்துவோருக்கு நிதியுதவி வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


ஊரடங்கால் வேலையின்றி தவிப்பு: முடி திருத்துவோருக்கு நிதியுதவி வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 May 2020 2:45 AM IST (Updated: 10 May 2020 1:22 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் முடி திருத்துவோருக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனாவால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் வருமானம் இன்றி சிரமப்படுகின்ற ஏழை, எளிய மக்களுக்கு, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்வது பலன் தருகிறது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் உள்ள புரோகிதர்கள், சமையல்காரர்கள் உள்ளிட்டோருக்கும் நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும்.

குறிப்பாக திருமணம், திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சமையல் வேலைக்கு செல்லும் சமையல்காரர்கள், சமையலுக்கு உதவி செய்பவர்கள், நாதஸ்வரம், தவில் வாசிக்கும் வித்வான்கள், திருமண வரவேற்பினர் போன்றோர் ஊரடங்கினால் வேலையின்றி, வருமானம் இன்றி சிரமப்படுகிறார்கள்.

அதே போல வைதீக தொழிலில் ஈடுபட்டுவரும் சாஸ்திரிகள், சிவச்சாரியார்கள், வட்டாச்சாரியார்கள், கோவிலில் பூஜை செய்பவர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆகியோரும் ஊரடங்கால் தொழிலில் ஈடுபட முடியாமல் வருமானம் கிடைக்கவில்லை.

எனவே தமிழக அரசு கொரோனாவால், ஊரடங்கால் வேலையின்றி, வருமானம் இன்றி தவிக்கின்ற இவர்கள் அனைவருக்கும் மட்டும் அல்லாமல் துப்புரவாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் போன்ற நலிந்த பிரிவினருக்கும் நிதியுதவி வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story