விடைத்தாள் திருத்தும் மையங்களில் செய்யவேண்டிய பணிகள் என்ன? முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை அறிவிப்பு


விடைத்தாள் திருத்தும் மையங்களில் செய்யவேண்டிய பணிகள் என்ன? முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 23 May 2020 3:00 AM IST (Updated: 23 May 2020 12:09 AM IST)
t-max-icont-min-icon

விடைத்தாள் திருத்தும் மையங்களில் செய்யவேண்டிய பணிகள் என்ன? என்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடைத்தாள் திருத்தும் மையங்களில் செய்யவேண்டிய பணிகள் என்ன? என்பது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கிருமிநாசினி

* விடைத்தாள் திருத்தும் முகாமுக்கு வருகைதரும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை மேற்கொண்டு, சுகாதாரமாக இருக்கவும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து அவ்வப்போது தங்கள் கைகளை உரிய கிருமிநாசினி அல்லது சோப்புகொண்டு தூய்மைப்படுத்தி கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* விடைத்தாள் திருத்தும் பணிக்கு பயன்படுத்தப்படும் மேஜைகள், நாற்காலிகள் மற்றும் அறைகளை தண்ணீர் கொண்டு சுத்தம்செய்து கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

முக கவசம்

* ஆசிரியர்கள் தேர்வு மையங்களுக்குள் நுழையும்போதும், வெளியே செல்லும் போதும் கைகளை சோப்பினால் தண்ணீர்கொண்டு கழுவவும் மற்றும் கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்துகொள்ளவும், அனைவரும் முக கவசங்கள் அணிந்து கொள்ளவும், சமூக இடைவெளியினை மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

* கிருமிநாசினி கொண்டு பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களும் மற்றும் அனைத்து அறைகளும் காலை மற்றும் மாலையில் சுத்தம் செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story